கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க
பொதுவாகவே சமையலில் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான இடம் இருக்கின்றது. அனைவரும் சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருளாக இருந்தாலும், உண்மையில் கறிவேப்பிலை வெறும் சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது கிடையாது.
இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
செரிமான ஆற்றலை அதிகரிக்கும் அதன் நன்கு அறியப்பட்ட நன்மைகளுக்காக, உணவுகளை சமைக்கும் போது அதை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறோம்.
கூந்தல் வளர்ச்சி தொடக்கம் உடல் எடையை கட்டுப்படுத்து வரையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கறிவேப்பிலையை சந்தையில் இருந்து அதிக அளவு வீட்டிற்கு கொண்டு வாங்கிவந்துவிட்டால் அவை சில தினங்களிலேயே கருப்பாக மாறி பாவனைக்கு பொருத்தமற்றதாக மாறிவிடுகின்றது.
இந்த பிரச்சினையை பெரும்பாலான இல்லத்தரசிகள் எதிர்கொள்கின்றார்கள். சிலர் இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் இலைகள் கருப்பாகும் பிரச்சினை ஏற்படுகின்றது. இதற்கு என்ன தான் தீர்வு?
இந்த சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் கறிவேப்பிலையை நீண்ட நாட்களுக்கு அதன் சுவை, மணம் மற்றும் நிறம் மாறாமல் பாதுகாக்கலாம்.
எளிய வழிமுறைகள்
சிலர் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் கெட்டுப்போகாது என்று நினைத்துகின்ற போதிலும், அவை பெரும்பாலும் கருப்பாக மாறும். சில தினங்களிலேயே அதன் மணமும் குறைந்து இலைகள் கசப்பாக தன்மைக்கு மாறுகின்றது.
இவ்வாறு இலை கருப்பதற்கு முக்கிய காரணம் இலைகளில் உள்ள ஈரப்பதம் தான் எனவே கறிவேப்பிலையை நீண்ட நாட்களுக்கு புதிது போன்று பராமரிக்க வேண்டும் என்றால், குளிர்சாதன பெட்டியில் வைக்கும் முன்னர் லைகளில் ஈரப்பதம் அல்லாமல் போக சில நிமிடங்கள் வெயிலில் உலர்த்திவிட்டு காற்று குகாத ஒரு போத்தலில் போட்டு சேமித்து வைப்பது சிறப்பு.
இலைகள் சற்று ஈரமாக இருந்து நேரடியாக ஒரு கொள்கலனில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது ஈரலிப்பு காரணமாக பாக்டீரியாகள் தொழிபாடு அதிகரித்து அவை அழுக ஆரம்பித்துவிடும் நன்றாக உலர்த்திவிட்டு ,இலைகளிலிருந்து ஈரப்பதத்தை நீக்கிய பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு புதிது போல் இருக்கும். சுவை மற்றும் மணமும் கூட மாறாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |