எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகும் சூரியகாந்தி விதைகள்!
பொதுவாக நாம் பார்க்கும் சூரியகாந்தில் உள்ள விதைகள் நாம் உடலில் இருக்கும் எண்ணற்ற நோய்கள் குணமாக்கின்றன.
இந்த விதைகளில் வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் ஆகிய ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூரியகாந்தி விதைகளை எடுத்து கொள்ளலாம். உடல் களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும் தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது.
மேலும் குடல் எரிச்சல், மலச்சிக்கல் ஆகிய நோய்களுக்கு இந்த விதைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதுடன் இதயத்திற்கு தேவையான லினோலெனிக், ஓலிக் ஆகிய அமிலங்களும் இதில் இருக்கிறது.
அந்த வகையில் சூரியகாந்தி விதைகளுள் ஒழிந்திருக்கும் மருத்துவ குறிப்புகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெரிந்து கொள்வோம்.