பப்பாளி பழத்திற்குள் ஒளிந்திருக்கும் விதையின் அற்புத பலன்கள்!
பொதுவாகவே சில பழங்களை சாப்பிட்டால் அதினுள் இருக்கும் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம் அவ்வாறு தூக்கி எறியும் பழ விதைகளில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது தெரியுமா?
பப்பாளி பழத்தில் அதிகளவான நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்திருக்கிறது. மேலும், பப்பாளிப் பழத்தை சாப்பிட்டால் இயற்கையாகவே பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
அப்படி பல நோய்களுக்கு மருந்தாக இருக்கும். இந்த பப்பாளிப் பழத்தில் இருக்கும் சத்துக்களைப் போல பப்பாளி விதையிலும் பல நன்மைகள் உண்டு.
பப்பாளி விதையின் நன்மைகள்
பப்பாளி விதையில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நிறைய ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன.
பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்திருக்கிறது. இது ஆன்டிஆக்ஸிடனட்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்தப் பப்பாளி விதைகள் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் அதிகம் கொண்டிருக்கிறது.
இந்த விதைகளில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் எனும் கொழுப்பு அமிலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
பப்பாளி விதையானது உடலில் இருக்கும் நோய்த்தொற்று எதிராக போராடும்.
உடலில் இருக்கும் திரவங்களையும் கழிவுகளையும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக வைக்கும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கும்
ஹார்மோன் உற்பத்தியை சீராக்கி உடலை பாதுகாக்கும்
உடல் பருமனை கட்டுக்குள் வைக்க உதவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |