முகம் தங்கம் போல் ஜொலிக்கணுமா? அப்போ வெல்லத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க
பொதுவாகவே எல்லோருக்கும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்களின் முக மற்றும் கூந்தல் அழகை பராமரிப்பதில் மிகவும் அக்கறை செலுத்துகின்றார்கள்.
ஆனால் சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு இயற்கை வைத்தியம் என்று வரும்போது போது பெரும்பாலானர்கள் வெல்லத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
கரும்பு அல்லது பனை சாற்றில் இருந்து பெறப்படும் இந்த சுத்திகரிக்கப்படாத சர்க்கரை, பொதுவாக இனிப்புகள் மற்றும் பாரம்பரிய உணவுகளில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் வெல்லமானது கூந்தல் பராமரிப்பு மற்றும் சரும ஆரோக்கிய்ததை பேணுவதில் பெரிதும் துணைப்புரிகின்றது என்பது குறித்து பலரும் அறிந்திருப்பதில்லை. வெல்லத்தை பயன்படுத்தி முகம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊட்டச்சத்து
பொதுவாகவே வெல்லத்தில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் ஆகிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்ககள் நிறைந்துள்ளதாக அறியப்படுகின்றது.
அதனை சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுத்தும் போது முகம் இயற்கையாகவே பொலிவடைவதுடன் கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்க கூடியதாக இருக்கும்.
இறந்த செல்களை நீக்கும்
வெல்லத்தில காணப்படும் எக்ஸ்ஃபோலியண்ட் பண்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை மென்மையாக அகற்ற பொரிதும் துணைப்புரிகின்றது.
மேலும் இதில் காணப்படும் கிளைகோலிக் அமிலம் சருமத்தை புத்துயிர் பெறவும் அதன் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
வயதாகும் விளைவைக் குறைக்கும்
வெல்லத்தில் நிறைந்திருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் முன்கூட்டிய முதுமைக்கு காரணமாக இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றது. என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.
மசித்த வாழைப்பழத்துடன் வெல்லம் மற்றும் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ் மாஸ்க்கை தயார் செய்து அதனை தினசரி முகத்தில் தடவி வந்தால் முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவி்டும்.
முகப்பருக்களைத் தடுக்கிறது
வெல்லத்தின் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு உட்பட பல சரும பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கொடுக்கும். தினமும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது அல்லது காலை தேநீரில் போட்டு குடிப்பது போன்றவற்றின் மூலம் இதன் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
மேலும் முகப்பருக்கள் உள்ள பகுதிகளில், வீக்கத்தைக் குறைக்கவும், வெடிப்புகளைத் தடுக்கவும் வெல்லம் மற்றும் மஞ்சளை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரையில் ஊறவிட்டு முகத்தை கழுவினால் முகப்பருக்கள் மற்றும் அதன் வடுக்கள் விரைவில் மறையும்.
சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கிறது
வெல்லம் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் உடன் வெல்லம் தூளைக் கலந்து , முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் எப்போதும் மென்மையாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |