அசிங்கப்படுத்தும் கருவளையம் நிரந்தரமாக போகணுமா? இந்த ஒரே ஒரு Tips போதும்
பொதுவாக மனிதர்கள் முக அழகிற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதே சமயம், முகத்திற்கு அழகு சேர்ப்பது என்றால் அது முகத்தில் இருக்கும் 2 கண்கள் மட்டுமே. கண்களை வைத்து தான் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதனை பலரும் தெரிந்து கொள்கிறார்கள்.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு மட்டும் கண்களை சுற்றி கருவளையம் வந்திருக்கும்.
அதனை பார்த்தவுடன் மற்றவர்கள் நமக்கு கருவளையம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது தான் யோசணையில் வரும்.
அந்த வகையில் கண்களை சுற்றி கருவளையம் வராமல் தடுப்பது எப்படி என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கருவளையம் வர காரணங்கள்
- மனக்கவலை
- தூக்கமின்மை
- ஊட்டச்சத்து குறைபாடு
- உடல்நிலை பிரச்சினைகள்
- அதிகப்படியான சிந்தனை
- தொழிநுட்ப சாதனங்கள் அதிகமான பயன்படுத்தல்
கருவளையம் வராமல் தடுப்பது எப்படி?
1. கண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வர வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
2. நாளொன்றுக்கு அனைவரும் நன்றாக தூங்க வேண்டும். எப்படியான பிரச்சினைகள் இருந்தாலும் தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
3. சிலர் கண்களுக்கு கிரீம் பயன்படுத்துவார்கள் அல்லது மேக்கப் போடுவார்கள் இவற்றை அகற்றும் போது கண்களை நன்றாக தேய்ப்பார்கள். இப்படி அதிகமாக அழுத்தம் கொடுத்தால் கண்களைச் சுற்றி கருவளையம் வரும்.
4. பொதுவாக கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நன்றாக மசாஜ் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் கண்களில் நீர்ச்சத்து அதிகமாகும். மசாஜ் செய்வதால் நீர்ச்சத்து குறையும். சிலருக்கு நீர்ச்சத்து அதிகமானால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
5. கண்களுக்கு கீழே உள்ள பகுதியில் வறட்சி ஏற்பட்டால் அவற்றை Moisturizer பயன்படுத்தி சரிச் செய்யலாம். கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு கிரீம்களை பயன்படுத்துவதால் கருவளைய பிரச்சினைகளை கட்டுபடுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |