Tips:இந்த பிரச்சினைகள் உங்களுக்கும் இருக்கா? எளிய தீர்வு இதோ!
பொதுவாகவே நாம் வீடுகளில் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். சில சமயம் அதற்கு தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என நாம் சிந்தித்திருக்ககூடும்.
இவ்வாறு நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சில முக்கிய பிரச்சினைகளுக்கான எளிமையன தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டுக்கு தேவையான டிப்ஸ்
பொதுவாக வெள்ளி ஆபரணங்களை எப்படி பாதுகாத்து வைப்பது என்பது தொடர்பில் அனைவருக்கு சந்தேகம் இருக்கும். அதற்கு எளிமையான தீர்வாக சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்க முடியும். நீண்ட நாட்களுக்கு வெள்ளி புதிது போல் இருக்கும்.
வீட்டில் எறும்புப் தொல்லை என்பது அவைவருமே எதிர்நோக்கும் ஒரு பிரச்சினை தான். இதற்கு எறும்புகள் இருக்கும் இடத்தில் கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் போதும் எறும்பு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் உப்பு கலந்து அதனை எறும்பு நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளிப்பதும் தீர்வு கொடுக்கும்.
குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் பூ வைத்தால் கீழே விழுந்துக்கொண்டே இருக்கும் அதற்கு விளக்கின் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிவிட்டு பூ வைத்து பாருங்க அதற்கு பின்னர் விழாது.
துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துணியில் இருந்து நீக்குவது சலாலான விடயமாக இருக்கும். அதனை எளிமையாக துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கிவிடும் அதற்கு தீர்வாக வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால் அதன் பின்னர் வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னும்.
வீடுகளில் அடிக்கடி பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விடும். இனி அதனை தூக்கியெறியாமல் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யதால் போதும் ஓட்டை மறைந்துவிடும். மீண்டும் பயன்படுத்த முடியம்.
எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் துர்நாற்றம் வராது. மேலும் பூச்சிகள் அணுகுவதையும் தவிர்க்கலாம்.
பொதுவாக ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியதும் வீசிவிடுவோம். ஆனால் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணிகள் எப்போதும் வாசனையாக இருக்கும்.
வீட்டில் பிரிட்ஜ் இல்லாதவர்கள் இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் வைக்க மிகவும் சிரமப்படுவார்கள். இவர்கள் அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடி வைத்தால் புளித்து போகாமல் இருக்கும்.
மேலும் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வைத்ததால் காய்கறிகள் நீண்ட நேரம் வாடமல் இருக்கும்.
வீடுகளில் பொருட்களை கரையான் அரிப்பது பெரும் தொல்லையாக இருக்கும். அதற்கு கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வைத்ததால் கறையான் கிட்டவே நெருங்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |