ஊற வைத்த பாதாம், திராட்சையை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
டயட்டில் இருப்பவர்கள் மற்றும் காலை சாப்பாட்டை தவற விடுபவர்கள் பாதாம் ஊற வைத்து பாலூடன் குடிப்பார்கள்.
இது காலையுணவிற்கு இணையான ஊட்டசத்துக்களை உடலுக்கு கொடுக்கின்றது.
பாதாம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் பாதாமை தண்ணீரில் ஊற வைத்து அதன் பின்னர் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
பாதாம் சாப்பிடுவதால் என்ன நன்மை?
1. இயற்கையாகவே பாதாமில், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவைகள் அதிகமாக இருக்கின்றது. காலையில் இது போன்று செய்து சாப்பிடுவதால் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
2. பாதாமுடன் திராட்சையை சாப்பிடுவதால் இரத்தயோட்டம் அதிகமாகின்றது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.
3. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று பகுதியில் அதிகமான வலி இருக்கும். ஆகையால் மாதவிடாய் காலங்கள் இது போன்ற சத்தான பொருட்கள் சாப்பிடுவதால் வலி கட்டுபடுத்தப்படுகின்றது.
4. தினமும் காலையில் இதனை சாப்பிடுவதால் காலங்காலமாக சரிச் செய்ய முடியாத செரிமான பிரச்சினை குணமாகும்.
5. ஊறவைத்த திராட்சை, பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |