பாதாம் தோலிலும் இத்தனை நன்மைகளா? இனிமேல் தூக்கி போடாமல் இப்படி பயன்படுத்தி பாருங்கள்!
பருப்பு வகைகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழக்கும் ஒரு வகைப் பருப்புதான் பாதாம். இதில் எமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்திருக்கிறது.
ஆனால் பாதாம் தோலிலும் அத்தனை நன்மைகள் இருக்கின்ற என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், பாதாம் தோலில் சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு மற்றும் இன்னும் நிறைய நிறைய நன்மைகள் கொண்டிருக்கிறது.
பாதாம் தோலில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது.
பாதாம் தோலில் பயன்பாடு
பாதாம் தோலை சேகரித்து அதில் தேன், முட்டை மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை சேர்த்து கூந்தலில் தடவி 15இலிருந்து 20 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு அலச வேண்டும். இவ்வாறு செய்வதால் முடி வலுவடைந்து முடி உதிர்வு இல்லாமல் போகும்.
பாதாம் தோலை நன்கு அரைத்து தலையில் தடவி வந்தால் பேன் தொல்லைகள் மற்றும் வறட்சி இல்லாமல் போகும். பாதாம் தோலை தண்ணீர் சேர்த்து உடலில் இருக்கும் சரும பிரச்சினைகளுக்கு போட்டால் உடலில் புண்கள் மற்றும் பருக்கள் எல்லாம் இல்லாமல் போய் சருமம் பொலிவாக இருக்கும்.
1 தேக்கரண்டி பாதாம் தோலில் 2 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி மஞ்சள், ரோஸ் வாட்டர் மற்றும் தேன் கலந்து 5 நிமிடம் ஊற வைத்து பிறகு இந்த கலவையை பாடி ஸ்க்ரப்பர் மற்றும் ஃபேஸ் பேக்காக தடவினால் சருமம் ஈரப்பதன் இல்லாமல் மென்மையாக இருக்கும்.
பாதாம் தோல்களை நன்கு வெயிலில் காய வைத்து நன்றாக பொடி போல அரைத்து தாவரங்களுக்கு தூவினால் அவை உரமாக மாறி தாவரங்கள் நன்றாக வளரும்.
பாதாம் தோலை எவ்வாறு சாப்பிடலாம்?
ஒரு சிலர் சொல்லுவார்கள் பாதாம் தோலை சாப்பிடக்கூடாது என்று ஆனால் பாதாம் தோலை வெவ்வேறான வழிகளில் சாப்பிடலாம்.
பாதாம் தோலை இரவு முழுவதும் ஊறவைத்து பிறகு வேர்கடலை வறுத்து பாதாம் தோலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகு தூள், சீரகம் சேர்த்து அதை நன்றாக வதக்கவும். அது ஆறிய பிறகு, இந்த கலவையில் அரைத்த பாதாம் தோல், வேர்க்கடலையை சேர்த்து தேவையான உப்பு, புளி சாறு சேர்த்து கலக்கவும்
கடைசியாக கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து பாதாம் சட்னி உடன் கலந்து சாப்பிடவும்.