வாத பிரச்சினைக்கு ஒரு டம்ளர் சுக்கு காஃபி போதுமாம்!
நாம் வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் சுக்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றது.
சுக்கில் ஜிஞ்சிரால் மற்றும் ஷோகோல் என இரண்டு வேதிப் பொருட்கள் இருக்கின்றன.
இது சாதாரண வலி நிவாரணியாக செயற்பட்டு உடனுக்குடன் ஆரோக்கியத்தை வழங்குகின்றது.
அந்த வகையில் சுக்கில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சுக்கினால் தீரும் நோய்கள்
1. மயக்கம் ஏற்பட்டால் சுக்கு தண்ணீர் கொடுத்தால் மயக்கம் இல்லாமல் போகும்.
2. வீக்கத்தைக் கரைக்கும்.
3. காய்ச்சல் நேரங்களில் காபியில் சுக்கு கலந்து குடித்தால் எந்தவிதமான மருந்துகளும் இல்லாமல் காய்ச்சல் தன்னால் குறையும்.
4. வலி நிவாரணி செயற்படும்.
5. ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தாரளமாக சுக்கை எடுத்து கொள்ளலாம் ஈரலை பாதுகாக்கின்றது.
6. தலைவலி ஏற்பட்டால் பெறும்பான்மையினர் சுக்கு கலந்து டீ குடிப்பார்கள். இந்த டீ தலைவலியை நொடிப்பொழுதில் இல்லாமலாக்கும்.
சுக்கை எப்படி எடுத்து கொள்வது?
வீடுகளில் சுக்கு வாங்கி வந்த பின்னர் அதன் மீது சுண்ணாம்பு களிம்பை தடவுவார்கள் அதனை வெயிலில் நன்றாக காய வைப்பார்கள். பின்னர் மேசைக்கரண்டியால் நன்றாக சுரண்டிய பின்னர் சுக்கை பயன்பாட்டிற்கு எடுப்பார்கள்.
மதிய உணவு சமைக்கும் பொழுது சுக்கு சேர்த்து சமைப்பார்கள்.
அரிசி மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றால் செய்யப்படும் அதிரசத்திற்கு சுக்குபொடி சேர்ப்பார்கள்.
ரசம் வைக்கும் போது சுக்கு பொடி கொஞ்சமாக சேர்ப்பார்கள்.
டீ மற்றும் காஃபிக்கு வாசனைக்காக இந்த சுக்குபொடி சேர்ப்பார்கள்.
சுக்கினால் எமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
1. குமட்டல், வாந்தி, தலைசுற்றல் ஏற்படும் போது தேன் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டால் விரைவில் குணமடையும்.
2. தலைவலி, தொண்டைகரகரப்பு, தொண்டைக்கட்டு, ஆகியவற்றிற்கு தண்ணீரில் சுக்குப்பொடியை போட்டு பற்றுப்போல் செய்து பூசினால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் தீரும்.
3. சுக்குபொடியில் காபி போட்டு குடித்தால் செரிமான பிரச்சினைகள் குறையும். மேலும் நீர்க்கழிச்சல் குறையும்.
4. பத்து கிராம் சுக்குத்தூள், 5 மி.லி. விளக்கெண்ணெய் ஆகிய இரண்டையும் சேர்த்து தினமும் படுக்கைக்கு முன்னர் பூசினால் மூட்டுவலிகள், மூட்டு வீக்கம் தீரும்.
5. சுக்கு கலந்த நீரை தினமும் பருகினால் உதறுவாதம், முகவாதம், பாரிசவாதம், பக்கவாதம் ஆகிய பிரச்சினைகள் தீரும்.