தலைவலி போக்கும் சிறந்த பொருள் சுக்கு...
Headache
Ginger
Weight Loss
By Sinduja
நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியே சுக்கு எனப்படும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சுக்கு எளிதில் பழுதடையாத ஒரு பொருளாகும். இதை மசாலாவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தலாம்.
இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல விடயங்கள் காணப்படுகின்றன. அவற்றை பார்க்கலாம்...
- இது செரிமானத்தை இலகுவாக்குகிறது.
- எலுமிச்சை சாறு, தேனுடன் இஞ்சியை நன்றாக கொதிக்க வைத்து,வடிகட்டி குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- வெற்றிலை, ஐந்து மிளகு, சுக்கு என்பவற்றை மென்று தின்று ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்தால் பூரான், தேள் கடி விஷம் முறிந்துவிடும்.
- இருமல் குணமாகவேண்டுமென்றால், அதிமதுரம், சுக்கு என்பவற்றை தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.
- துளசி இலையை சுக்குடன் மென்று தின்றால் குமட்டல், வாந்தி நிற்கும்.
- வேப்பிலை, வெள்ளைப் பூண்டு, சுக்கு, மிளகு என்பவற்றை கஷாயமாக செய்து மூன்று வேளை குடித்துவந்தால் விஷக் காய்ச்சல் குறையும்.
- பல்கூச்சம், வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் சுக்கை சிறிதளவு பொடியாக்கி, அதனுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வரவேண்டும்.
- நாட்டுச் சர்க்கரை, வெதுவெதுப்பான பால், சுக்கு பொடி என்பவற்றை கலந்து குடித்து வர சிறுநீரக தொற்று குணமாகும்.
- உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றிவிடும்.
- தலைவலிக்கு சுக்கை உரசி அதில் சிறிதளவு பெருங்காயத்தூளை கலந்து தலையில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
- உணவுப் பாதையை சுத்தமாக்கிவிடும்.
- சுக்கு பொடி, தேன் என்பவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
- மூட்டு வலி, வீக்கம் என்பவற்றை குணப்படுத்தும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US