ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி கூந்தலில் தடவி மசாஜ் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
hair
ginger
By Nivetha
இஞ்சியை பயன்படுத்தி கூந்தல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
- ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலின் மயிர்கால் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும்.வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சினை முற்றிலும் நீங்கிவிடும்.
- இஞ்சி சாற்றை தலையில் தடவும்போது நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.
- இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் சிறப்பு சேர்மம் உள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவும். சிறந்த ரத்த ஓட்டம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்.
- உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம்.
- அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும்.
- கூந்தலுக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனராகவும் இஞ்சி செயல்படும்.
- கூந்தலுக்கு ஜொலிப்பைத் தரும் செபம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும் சக்தியும் இஞ்சிக்கு இருக்கிறது.
- இஞ்சியில் முடிக்கு ஊட்டமளிக்கும் லினோலிக் அமிலம் போன்ற சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
- ஒரு துண்டு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில் கலந்து கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
- அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால் கூந்தல் வலிமையாகும்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US