பூண்டை மென்று விழுங்கினால் இவ்வளவு நன்மைகளா? கர்ப்பணி பெண்கள் செய்யாதீங்க
பொதுவாக பூண்டு சமையல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பூண்டில் அலிசின் காம்பவுண்ட் அளவு அதிகமாக இருப்பதால் தனித்துவமான சுவையையும், நறுமணத்தையும் கொண்டிருக்கும்.
மேலும், ஆன்டிமைக்ரோபியல், ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி ப்ராப்பர்டிஸ் உள்ளிட்டவற்றை பூண்டில் இருக்கின்றன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எம்மை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் பூண்டு இல்லாமல் உணவு சமைப்பது குறைவாகவே இருக்கும். ஏனெனின் பூண்டை உணவுடன் சேர்த்து கொள்வதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
இவ்வளவு சிறப்பு கொண்ட பூண்டை வெறும் வாயில் மென்று விழுங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பச்சையாக பூண்டு சாப்பிடலாமா?
1. பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் இருமல் அல்லது சளி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இரண்டு பூண்டு பற்களை அரைத்து வெறும் வயில் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமையை இது தடுக்கிறது.
2. ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை பூண்டு குறைக்கிறது. அத்துடன் இதய நோய் வருவதற்கான வாய்ப்புக்களையும் இல்லாமலாக்குகிறது. பூண்டில் இருக்கும் அல்லிசின், கொலஸ்ட்ரால் அளவு குறைத்து இதய ஆரோக்கியம் பாதுகாக்கிறது.
3. பூண்டில் இருக்கும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி பண்புகள் அழற்சி கட்டுக்குள் வைக்கிறது. அத்துடன் செரிமான பிரச்சினை, மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்களுக்கு தீர்வளிக்கிறது.
4. உணவில் பூண்டு சேர்ப்பதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, கெட்ட பாக்டீரியாக்களின் ஆதிக்கம் குறைகிறது.
5. பூண்டில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கண் மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. இதனால் தாரளமாக குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம்.
முக்கிய குறிப்பு
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பூண்டில் வைத்தியம் செய்யும் முன்னர் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |