நுரையீரலை இயற்கையாக சுத்தப்படுத்தும் திப்பிலி.. எப்படி சாப்பிட வேண்டும்?
பொதுவாக தற்போது இருக்கும் நவீன மயமாக்கலினால் காற்று மாசுபடுதல் மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இதனால் பூமியில் வாழும் விலங்குகளின் சுவாசம் பாதிக்கப்படுகின்றது.
தொடர்ந்து மாசுப்பட்ட காற்றை மனிதர்கள் சுவாசிப்பதன் மூலம் அதிகமான நுரையீரல் கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இது போன்ற நேரங்களில் காற்றிலிருந்து எம்மை காத்துக் கொள்ள சீரான உடற்யிற்சி, சரிவிகித டயட் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக வாழ்க்கை முறை இன்றியமையாதது.
மூலிகை வடிவத்தில் கிடைக்கும் இயற்கை நிவாரணங்களை தொடர்ந்து எடுத்து கொண்டால் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
அந்த வகையில் இயற்கையாகவே நுரையீரலை சுத்தப்படுத்தும் மூலிகை பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
நுரையீரலை சுத்தப்படுத்தும் மூலிகை
1. ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. துளசியில் உள்ள பைடோகெமிக்கல்ஸில் சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனால் தினமும் டீயுடன் துளசியை சேர்த்து குடிக்கலாம். இது நுரையீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றி சுவாசத்தை மேம்படுத்துகிறது.
2. ஆடாதோடையானது சளி, இருமலை போக்கி ஒட்டுமொத்த நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மூலிகையாக காணப்படுகிறது. சளியால் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளை கூட குணப்படுத்துகிறது.
3. அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் மற்ற மூலிகைகளை விட இஞ்சிக்கு அதிகம் உள்ளது. இது சுவாசப் பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. காலையில் டீயுடன் இஞ்சி சேர்த்து கொண்டால் சுவாசம் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
4. சுவாசப் பிரச்சனைகளை போக்கும் மூலிகைகளில் அதிமதுரமும் ஒன்று. இது சளியை நீக்கி சுவாசப்பாதையை சீர்ப்படுத்தும். மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, தொண்டை வறட்சி போன்ற பிரச்சனைகளும் தீரும். அதிமதுரத்தை டீயாகவோ அல்லது சப்லிமென்ட்ஸாகவோ எடுத்து கொள்ளலாம்.
5. மேற்கத்திய நாடுகளில் திப்பிலியை மூலிகையாக யாரும் பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் திப்பிலியில் பயோ ஆக்டிவ் கலவைகள் உள்ளன. இது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற சுவாசப் பிரச்சனைகளை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.
இதனை பொடியாகவோ அல்லது சப்ளிமெண்ட்ஸாகவோ எடுத்து கொண்டால் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |