தொட்டதெல்லாம் பொன்னாக்கும் வார ராசி பலன் - 12 ராசிகளுக்கும் இவ்வாரம் எப்படி?
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியின்போதும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும். இவை வார ராசி அன்றைய ராசிபலன் மற்றும் கிரகப்பெயர்ச்சி ராசி பலன் போன்றவை நடைபெறும்.
இந்த வகையில் இந்த வாரம் (ஜனவரி 11, 2026 முதல் ஜனவரி 18, 2026 வரை) கிரக நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளன.
இந்தப் புதிய வாரம் அவர்களுக்குப் புத்துணர்ச்சி, புதிய வாய்ப்புகள் மற்றும் தெளிவான முடிவுகளை எடுக்கும் திறனைத் தரும். அந்த வகையில் தற்போது இந்த வாரம் 12 ராசிகளும் என்ன பலனை அனுபவிக்கும் இந்த வாரம் அவர்களுக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

வார ராசி பலன்
| மேஷம் | பஞ்சாயத்துகள் முடியும், வேலை தேடுபவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. |
| ரிஷபம் | ரியல் எஸ்டேட் துறையில் லாபம் கிடைக்கும். தந்தையுடனான கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். |
| மிதுனம் | அஷ்டமத்தில் கிரகங்கள் இருப்பதால் வம்பு, வழக்கு மற்றும் விபத்துகளில் எச்சரிக்கை தேவை. இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். |
| கடகம் | யோகமான காலம். பழைய அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. |
| சிம்மம் | எதிரிகளை வெல்லும் காலம். நீண்ட காலக் கடன்கள் தீர வாய்ப்புள்ளது. உடல் உஷ்ணம் மற்றும் அல்சர் தொடர்பான பிரச்சனைகளில் கவனம். |
| கன்னி | சொத்துக்கள் கைக்கு வரும். விளையாட்டில் உள்ளவர்களுக்குச் சிறந்த நேரம். முதல் குழந்தையின் உடல்நிலையில் அக்கறை தேவை. |
| துலாம் | புதிய வீடு அல்லது வண்டி வாங்கும் யோகம் உண்டு. திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். பிபி மற்றும் முதுகு வலியில் கவனம். |
| விருச்சிகம் | மன வலிமை கூடும், நண்பர்களின் உதவி கிடைக்கும். ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு அபாரமான வளர்ச்சி உண்டு. |
| தனுசு | மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். திருமண வாழ்க்கை கைகூடும். பேசும்போது நிதானம் தேவை, இல்லையெனில் குடும்பத்தில் தகராறு ஏற்படும். |
| மகரம் | அரசியல் மற்றும் அரசுத் துறையில் உள்ளவர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் வரும். நிலம் தொடர்பான பஞ்சாயத்துகள் சாதகமாகும். |
| கும்பம் | ஜனவரி 15 வரை லாபம் இருக்கும், அதன் பின் வேலைப்பளு மற்றும் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத் தேடல் கூடும். |
| மீனம் | இந்த வாரத்தின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி மீனம் தான். பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு மற்றும் அரசு ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).