கோடைக்காலத்தில் கிராம்பு உட்கொண்டால் பிரச்சனை ஏற்படுமா?

Indigestion Summer Season
By Manchu Jul 25, 2026 03:44 PM GMT
Report

கோடை காலத்தில் கிராம்பு பயன்படுத்தினால் பிரச்சனையா? அல்லது இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கிராம்பு

கிராம்பை மழை மற்றும் குளிர்காலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான நபர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் கோடை காலத்தில் உடல் சூடாக இருப்பதால் கிராம்பை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் நிலையில், சரியாக பயன்படுத்தினால் நன்மைகளை பெற முடியும் என ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியலின்படி கூறப்படுகின்றது.

உடல் சூட்டை சமநிலைப்படுத்துவதற்கு கிராம்பு எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கோடைக்காலத்தில் கிராம்பு உட்கொண்டால் பிரச்சனை ஏற்படுமா? | Benefits Of Eating Cloves During Summer

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே!

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே!


ஆயுர்வேதத்தில் கிராம்பு

ஆயுர்வேதத்தில் கிராம்பு தேவபுஷ்பம் என்று அழைக்கப்படுகின்றது. உஷ்ண தன்மையை கொண்டாலும், கபம், பித்தம் மற்றும் ரத்த தோஷங்களை கட்டுப்படுத்தும் சக்தி இதற்கு உண்டாம்.

இதனை சரியான அளவில் உட்கொள்ளும்போது உடல் வெப்பத்தை அதிகரிப்பதில்லை. உள் உறுப்புகளை குளிர்வித்து சமநிலையினை பராமரிக்கவும் செய்கின்றது.

கோடை வெயிலால் சரும எரிச்சல், தலைசுற்று, அதிக தாகம் ஏற்படுகின்றது. கிராம்பு உடலில் நீர் தேக்கத்தினை சீராக்க உதவுவதுடன், உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதால், அடிக்கடி வாய் வறட்சி மற்றும் தாகம் பிரச்சனையை குறைக்கின்றது.

கோடைக்காலத்தில் கிராம்பு உட்கொண்டால் பிரச்சனை ஏற்படுமா? | Benefits Of Eating Cloves During Summer

வாய்ப்புண்கள் வர காரணம் என்ன? இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன?

வாய்ப்புண்கள் வர காரணம் என்ன? இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன?


நன்மைகள் என்ன?

இரண்டு கிராம்புகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை குடிப்பதால், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றது.

கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பாக உதவுகின்றது. இரத்தத்தினை சுத்திகரிக்க உதவுவதால், கோடை வெப்பத்தினால் ஏற்படும் கண் எரிச்சல் சோர்வு இவற்றினை குறைக்கின்றது.

கிராம்பை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடனடி ஆற்றல் உடலுக்கு கிடைப்பதுடன், வறட்சியையும் குறைக்கின்றது. நீரிழப்பு பற்றாக்குறையை குறைக்கின்றது.

கோடைக்காலத்தில் கிராம்பு உட்கொண்டால் பிரச்சனை ஏற்படுமா? | Benefits Of Eating Cloves During Summer

கோடையில் வெப்பம் காரணமாக வாய் மற்றும் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் பெருகி, வாய் துர்நாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. கிராம்பு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், கிருமியையும் கொல்கின்றது.

உணவுக்கு பின்பு ஒரு கிராம்பை மெல்லுவதால் சுவாசம் புத்துணர்ச்சியுடன் இருப்பதுடன், வாய் சுகாதாரத்தையும் மேம்படுத்துகின்றது. இதனால் தான் கிராம்பை பற்பசைகளில் பயன்படுத்துகின்றனர்.

கோடைக்காலத்தில் கிராம்பு உட்கொண்டால் பிரச்சனை ஏற்படுமா? | Benefits Of Eating Cloves During Summer

கோடையில் செரிமான அமைப்பு சற்று பலவீமனமடையு் என்பதால், வாயு, அமிலத்தன்மை, வயிறு வலி பிரச்சனை ஏற்படும். ஆனால் கிராம்பு செரிமானத்தை தூண்டி உணவை எளிதில் ஜீரணமாக்குகின்றது.

கிராம்பு கோடை காலத்தில் சூடு என்று கூறப்பட்டாலும் சரியான அளவில், தண்ணீரில் ஊற வைத்தோ, வெல்லத்தில் ஊற வைத்தோ சாப்பிட்டால் சில நன்மையினையும் பெற முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US