தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம்
பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினர், தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
தீபிகா படுகோண்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன். இவர் பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா தீபிகா படுகோண் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சுமாராக 6 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதியினருக்கு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் தீபிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்.
இந்நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவுக்கு தற்போது இணையத்தில் வாழ்த்து மழை பொழிந்த வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |