கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்!

Liver Doctors
By Vinoja Sep 14, 2026 03:31 PM GMT
Report

தற்போது கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சனையாக உள்ளது. முக்கியமாக, இந்த நோய் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக உருவாகும் தன்மை கொண்டது.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவது கொழுப்பு கல்லீரலுக்கான முக்கிய காரணமாக இருந்தாலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் போன்றவைகளும் இந்தப் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்! | Warning Signs Of Fatty Liver Disease On Your Face

இணையத்தை கலக்கும் ‘80s Photo Trend’... வைரலாக இது தான் காரணம்!

இணையத்தை கலக்கும் ‘80s Photo Trend’... வைரலாக இது தான் காரணம்!

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், நாளடைவில் கல்லீரலில் வீக்கம், வடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, தீவிரமான நிலையில் கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கலாம்.

ஆனால், ஆச்சரியப்படும் வகையில், சிலருக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் முகத்தில் சில மாற்றங்களாகத் தெரியக்கூடும். இந்த மாற்றங்களை கவனித்து, சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்! | Warning Signs Of Fatty Liver Disease On Your Face

அப்படி கொழுப்பு கல்லீரல் இருந்தால் முகத்தில் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பது  குறித்த விரிவான விளக்கத்தையும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள் 

முக வீக்கம்

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்! | Warning Signs Of Fatty Liver Disease On Your Face

கல்லீரல் சரியாக செயல்படாமல் இருப்பதன் முக்கியமான, முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகளில் ஒன்று முக வீக்கம். குறிப்பாக கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வீக்கம் காணப்படும்.

கல்லீரல் சரியாக செயல்படாதபோது, உடலுக்குத் தேவையான புரதங்களின் உற்பத்தி குறைந்து, திரவ சமநிலை மற்றும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படடும்.அதனால் எந்தவித அழற்சியும் இல்லாமல் தொடர்ந்து முகத்தில் வீக்கம் ஏற்பட்டால், அது கல்லீரலின் செயல்பாடு மோசமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

எனவே, இதுபோன்ற அறிகுறியை தொடர்ந்து சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

கழுத்துப் பகுதியில் கருமை

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்! | Warning Signs Of Fatty Liver Disease On Your Face

கழுத்துப் பகுதியில் திடீரென கருமையான படலம் போன்ற தோற்றம் ஏற்பட்டால், அது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய சில கல்லீரல் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும்போது, அது சருமத்தில் நிறமிகளின் உற்பத்தியை அதிகரித்து, குறிப்பாக கழுத்துப் பகுதியில் கருமையை ஏற்படுத்தலாம். இந்த மாற்றம் பெரும்பாலும் கழுத்துப் பகுதியில் தான் முதலில் கவனிக்கப்படும்.

எனவே, உங்கள் கழுத்துப் பகுதியில் திடீரென கருமை ஏற்படுவதை கவனித்தால், அதை சாதாரணமாக நினைக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

முகம் சிவந்து போவது

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்! | Warning Signs Of Fatty Liver Disease On Your Face

நாள்பட்ட கல்லீரல் பிரச்சனை சில நேரங்களில் முகம் சிவந்து போவதற்கும், ரோசாசியா போன்ற தோற்றத்தில் சிறிய கட்டிகள் அல்லது தடிப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் முகம் சிவந்து போவதற்கு கல்லீரல் நோய் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், இதனுடன் முக வீக்கம், கழுத்துப் பகுதியில் கருமை போன்ற மற்ற அறிகுறிகளும் இருந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மேலும், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் ஏற்படும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள், வாயைச் சுற்றி தடிப்புகள் அல்லது லேசான எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

ஏனைய அறிகுறிகள்

கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்! | Warning Signs Of Fatty Liver Disease On Your Face

உலகையே இணைத்த அதிசயம் - இன்டர்நெட்டை உருவாக்கியவர் யார்ன்னு தெரியுமா?

உலகையே இணைத்த அதிசயம் - இன்டர்நெட்டை உருவாக்கியவர் யார்ன்னு தெரியுமா?

கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமடையும் போது, உடலில் பிலிரூபின் அதிகமாக தேங்கலாம். இதனால் கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறி, மஞ்சள் காமாலை ஏற்படலாம்.சிலருக்கு இரத்தத்தில் பித்த உப்புக்கள் அதிகமாக சேர்வதால், முகத்தில் கடுமையான அரிப்பும் ஏற்படலாம்.

எனவே, எந்தவித காரணமும் இல்லாமல் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே கல்லீரல் பிரச்சினையை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US