வாரத்திற்கு இரண்டு தடவை குடிங்க.. வயிறு பிரச்சினைகள் தீரும்!
வழக்கத்திற்கு மாறாக தற்போது மாம்பழ பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. ஏனெனின் மாம்பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும், விரும்பி சாப்பிடும் அளவுக்கு சுவையும் உள்ளது.
இதனால் மாம்பழத்தை வைத்து செய்யப்படும் ரெசிபிகளின் எண்ணிக்கையையும் அதிகமாகி உள்ளது.
மழைக்காலங்களில் கிடைக்கும் மாம்பழத்தை விட கோடை காலத்தில் விளையும் மாம்பழங்கள் சுவை மிகுந்தவையாக இருக்கும். இனிப்பு மற்றும் புளிப்பு ஊறுகாய், சட்னி ஆகிய ரெசிபிகளை செய்து வைத்துக் கொண்டால் மாம்பழம் போதும் என்ற அளவுக்கு சுவைத்து விடலாம்.
இவ்வளவு நற்பண்புகளை நமக்கு கொடுக்கும் மாம்பழ இலைகளை போட்டு தண்ணீர் குடித்து வந்தால் நாள்பட்ட நோய்கள் குணமாகும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
வீட்டில் மங்கள நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படும் மா இலைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பண்பு கொண்டவை.
அந்த வகையில், மா இலை போட்டு தண்ணீர் குடித்தால் என்னென்ன ஆரோக்கிய பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
வயிறு பிரச்சினைகள் தீரும்!
1. ஆயுர்வேதத்தின் படி, மாம்பழ இலைகளை தண்ணீரில் போட்டு குடிக்கும் பொழுதுத நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக அமையும். தினமும் காலையில் மென்று மா இலை சாப்பிடும் பொழுது இது போன்ற நாள்ப்பட்ட நோய்களும் குணமாகும்.
2. வயிறு தொடர்பான பிரச்சினைகளால் அவஸ்தைப்படுபவர்கள் மா இலை போட்டு தண்ணீர் குடிக்கலாம். இது செரிமானத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கி, நச்சுக்களை வெளியேற்றும். வயிற்றில் நச்சுக்கள் நிறையும் பொழுது செரிமான அமைப்பில் பிரச்சினைகள் வரலாம்.
3. மா இலைகளை காலை தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்பவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மனதிற்கு அமைதியும் கிடைக்கும். கவலைகள் குறைந்து விடும்.
4. மாம்பழ இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் கொண்டால் கொதி நீரில் போட்டு குடிக்கும் பொழுது சளி, இருமல் பிரச்சினைகள் குறையும். மா இலைகளை கொதிக்க வைத்து வடிக்கட்டி அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சூடாக தேநீர் போல குடிக்கவும். இது ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாக மாறும்.
5. ஆயுர்வேதத்தின் படி, உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்களுக்கு மா இலை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் குறையும். மென்மையான மா இலைகளை மென்று சாப்பிடுவது இன்னும் உடலுக்கு நன்மை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |