2 வருஷமாக சாப்பிடாமல் இருந்தேன்.. பிரபல இந்திய நடிகரின் ஃபிட்னஸ் சீக்ரெட்
தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக இரண்டு ஆண்டுகளாக ஒரு உணவை நடிகர் ரன்பீர் கபூர் சாப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ரன்பீர் கபூர்
இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரன்பீர் கபூர்.
இவர், நடிப்பில் வெளியாகிய அனிமல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாராக 900 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து ரன்பீர் கபூர் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் அண்டு வார் என்ற திரைப்படத்திலும், பிரமாண்டமாக உருவாக்கம் பெற்று வரும் ராமாயணம் படத்தில் ராமர் கதாபாத்திரத்திலும் யதார்த்தமான நடிப்பை வெளிகாட்டி வருகிறார்.
தற்போது 43 வயதாகும் ரன்பீர் கபூர், கடந்த காலங்களில் ஃபிட்னஸிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
இதை சாப்பிடவே மாட்டேன்..
இந்த நிலையில், தன்னுடைய உடல் நிலை குறித்து ரன்பீர் கபூர் அளித்த பேட்டியில், “எனக்கு இனிப்புகளும், வறுத்த உணவுகளும் பிடிக்காது. இதனால் எப்போதும் எளிமையான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவேன். கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளை தவிர்த்து வீட்டில் சமைத்து தான் சாப்பிடுவேன்.
திரைப்படத்திற்காக உடல் எடை குறைக்கும் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கும் பொழுது ரொட்டி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விட்டேன். அதற்கு பதிலாக பழுப்பு அரிசியை பயன்படுத்தி உணவுகள் தயாரித்து சாப்பிடுவேன்.
அர்ப்பணிப்புவுடன் இருக்கும் பொழுது ஃபிட்னஸ் சாத்தியம் என்றும் கூறியுள்ளார்.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் கேமராவுக்கு முன்னர் எதையும் மறைக்க முடியாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |