35 வயது பெண்ணை மறுமணம் செய்த மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்!
75 வயதான முதியவர் ஒருவர் தனது மனைவியை இழந்து வருடகாலம் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், 35 பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
75 வயதான சங்ருராம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவியை இழந்த நிலையில் தனியாக ஒரு வருடமாக தனிமையில் வசித்து வந்துள்ளார்.
சங்ருராமுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் விசாயம் செய்து வாழ்கை நடத்தி வந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த 29 ஆம் திகதியன்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு முதியவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மறுமணம் முடிந்த மறுநாள் காலையில் திடீரென சங்ருராம் உயிரிழந்துள்ளார்.
அதனால் இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு, உறவினர்கள் இறுதிசடங்குகளை நிறுத்தியுள்ளனர். இது குறித்த விசாரணைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |