international coffee day: நீங்களும் காபி பிரியரா? காபி கண்டுபிடிக்கப்பட்டது இப்படி தானாம்!
பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், ' காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் ஏராளம்.அப்படி உலகம் முழுவதும் காபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான். அப்படி நீங்களும் ஒரு காபி பிரியரா? 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் ஆண்டுதோறும் பன்னாட்டு காபி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது உங்களுக்கு தெரியுமா? ஆம் இன்று சர்வதேச காபி பிரியர்கள் தினம்.
காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.
இத்தனை பெருமை மிகுந்த காபி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்பதும் இதனை பருகும் வழக்கம் எவ்வாறு உருவானது என்பதும் பெரும்பாலாக காபி பிரியர்களுக்கு தெரியாது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
காபி வரலாறு
காபி (Coffee) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்). இது காபி செடியில் விளையும் சிவப்பு நிறக் காபிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தப்படுகின்றது.
பரவலாக குறிப்பிடப்படும் காபி வரலாற்றின் பிரகாரம், ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுள் சிலபேர், ஒரு நாள் சில ஆடுகள் அதிக புத்துணர்ச்சியுடன் இருந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் பார்த்து வியந்தார்கள்.
இது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி அவர்களுக்கு எழுந்தது. ஆராய்ந்து பார்க்கையில் ஆடுகள் காபிச் செடி இலைகளையும் பழங்களையும் உண்டதால்தான் இப்படி அதிக விழிப்புடனும் ஆற்றலுடனும் இருந்தமை கண்டறியப்பட்டது.
தாங்களும் அவ்வாறு காபியின் சிறப்பான உணர்வூட்டும் தன்மையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தான் இது கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள்.எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட காபி எகிப்துக்கும் ஏமன் நாட்டிற்கும் பரவியது.
10 ஆம் நூற்றாண்டு வரை மத்திய கிழக்கில், குறிப்பாக இன்றைய ஈரான், ஏமன், சவுதி அரேபியா மற்றும் எத்தியோப்பியாவில் உள்ளது. காபி முதன்மையாக முஸ்லிம் மத விழாக்களில், குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டத்தினரை விழித்திருக்க மாலை பிரார்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன.
அதன் பின்னர், ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டளவில் பெர்சியா, துருக்கி, மற்றும் வட ஆப்பிரிக்காவுக்கும் பரவியது. அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் பிறநாடுகளுக்கும் பரவியது. குறிப்பாக, நெதர்லாந்துக்காரர்கள் (டச்சு) பெருவாரியாக காபியை இறக்குமதி செய்தார்கள்.
1690 ஆம் ஆண்டில் அரபு நாடுகளின் தடையை மீறி டச்சு மக்கள் காபிச் செடியை எடுத்து வந்து வளர்த்தார்கள். பின்னர் டச்சு ஆட்சி செய்த ஜாவா நாட்டில் பயிர் செய்தார்கள்.
இருப்பினும், காபியை அறிமுகப்படுத்துவதற்கு சில எதிர்ப்புகள் இருந்தன. இது இஸ்லாத்துடன் முக்கிய தொடர்பு கொண்டிருப்பதால், பல கிறிஸ்தவ அதிகாரிகள் அதை "பிசாசின் பானம்" என்று முத்திரை குத்தி அதை சட்டவிரோதமாக்க விரும்பினர்.
போப் கிளெமென்ட் VIII, காபியை ருசித்த பிறகு, காபி வர்த்தகத்திற்கு தனது ஆசீர்வாதத்தை வழங்கினார். இதனால் வணிக விற்பனை மற்றும் நுகர்வு அதிகரித்தது என்று பிரபலமான புராணக்கதை கூறுகிறது. காபி கொட்டைகள் கொலம்பிய பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவிற்கும், டச்சு மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய வர்த்தக நிறுவனங்களால் தென்கிழக்கு ஆசியாவிற்கும் சென்றன.
காபி பல நாடுகளுக்கு ஒரு பணப் பயிராக உள்ளது, சில சமயங்களில் அவற்றின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரேசில் மட்டும் உலகின் காபியில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை உற்பத்தி செய்தது.
1920 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா இதை முழுவதுமாக குடிக்க முயன்றது, உலகில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து காபியிலும் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை அமெரிக்கர்கள் பயன்படுத்தினார்கள்.
காபி வரலாறு குறித்து சில கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு தற்போது காபி உலக பொருளாதாரத்தில் முக்கிய அங்கமாகவே மாறியுள்ளது.
பன்னாட்டு காபி நிறுவனம் (International Coffee Organization - ICO), 2014 ஆம் ஆண்டு மார்ச் 3 முதல் 7 வரை மிலனில் நடைபெற்ற பன்னாட்டுக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, காபியை ஒரு பானமாக ஊக்குவிக்கவும், அதனைக் கொண்டாடவும் அனுசரிக்கப்படும் ஒரு நாளாக, உலகம் முழுவதும் பன்னாட்டு காபி நாள் (International Coffee Day) கொண்டாட முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் முதல் ஆண்டுதோறும் பன்னாட்டு காபி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |