வயதானாலும் சருமம் இளமையாக இருக்கணுமா? இந்த ஒரு பொருள் போதும்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகான காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.குறிப்பான முகத்தை அழகுப்படுத்திக்கொள்வதில் பெண்களுக்கு அலாதி இன்பம் இருக்கும்.
சருமத்தை அழகாக்கவும் முகப்பருக்களை போக்கவும் முகச்சுருக்கங்களை நீக்கவும் கடைகளில் கிடைக்கும் பல்வேறு ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகின்றார்கள்.இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் ஏறாளம்.
சரும அழகை பராமரிப்பதற்கு இயற்யைாக கிடைக்கும் தேன் எவ்வாறு துணைப்புரிகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முகத்தில் பருக்கள் மற்றும் சுருக்கங்கள் நீங்க...
தேனில் இயற்கையாகவே இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
முக அழகை பாதுகாக்க தேனை பயன்படுத்துவது முகப்பருவை எதிர்த்துப் போராட பெரிதும் துணைப்புரிகின்றது.மேலும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதில் தேன் பெரும் பங்கு வகிக்கின்றது.
சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க விரும்பினால் தேன் சிறந்த தெரிவாக இருக்கும். இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மேற்றும் கோடுகளை இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நீக்க பெரிதும் துணைப்புரிக்கின்றது.
ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் நிறைந்த தேன் சருத்தை பாதுகாப்பதுடன் இது புறஊதா கதிர்களில் இருந்து தோல் சேதத்தைத் தடுக்கவும் உதவுகின்றது.
தினமும் முகத்தில் தேனை தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவுவது ஒட்டுமொத்த சரும பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |