இந்த ராசியை சேர்ந்த கணவன் அமைந்தால் கஷ்டம் தான்... ஏன்னு தெரியுமா?
ஜேதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியின் அடிப்படையிலேயே அவருடைய தனிப்பட்ட மற்றும் விசேட குணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்த ஆண்கள் மிகவும் சோம்பேறித்தனம் கொண்ட கணவனாக இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் எந்த வேலையையும் ஈடுபாடுடன் செய்யவிரும்ப மாட்டார்கள். குறிப்பாக வீட்டு வேலைகளில் சின்ன உதவியை கூட இவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது.
இவர்களை திருமணம் செய்துக்கொண்டால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும். இவர்களுக்கு பொறுப்புக்களை சுமப்பது பிடிக்காது.
சிம்மம்
சிம்ம ராசியினர் எப்போதும் பொறுப்புக்களை ஏற்கமறுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
அவர்களை திருமணம் செய்யும் பெண்கள் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் எந்த உதவியையும் பெரும்பாலும் புறக்கணித்துவிடுவார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்த ஆண்களை விட யாராவும் சோம்பேறியாக இருக்கவே முடியாது. இவர்கள் பொறுப்புக்களை சுமக்க ஒருபோதும் விரும்புவது கிடையாது.
இவர்களின் சோம்பேறித்தனம் உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்திடும். இவர்கள் பெரும்பாலும் குடும்ப பொறுப்புக்களை ஏற்கமறுக்கும் தன்மை கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |