நீரிழிவு நோயாளிகள் வெந்தயத்தை பச்சையாக சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வயது பேதமில்லாமல் அதிகரித்து வருகிறது.
இவர்கள் வெந்தயம் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியுமா என்பது குறித்து இன்று பார்க்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மருத்துவரிடன் தொடர் சிகிச்சையோடு உணவு முறை, பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கவனமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
நீரிழிவு நோயை வெந்தயம் எப்படி குணப்படுத்தும்?
வெந்தயத்தை சாப்பிடுவது டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் இரண்டையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வுகள் தெளிவாக காட்டுகின்றன .
இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயாளிகளின் வழக்கமான உணவில் 100 கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட வெந்தயப் பொடியைச் சேர்ப்பது இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.
அதே நேரத்தில் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உணவில் 15 கிராம் வெந்தய பொடியை சேர்ப்பது உணவுக்கு பிறகு ஏற்படும் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கான வெந்தயத்தின் அளவு
நீரிழிவு நோயின் தீவிரம், நோயாளியின் வயது மற்றும் உடல் நிலையை பொருத்து வெந்தயத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 2.5 கிராம் முதல் 15 கிராம் வரை இருக்கும்.
12.5 கிராம் வெந்தயப் பொடியை எடுத்து வருவது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் 500 mg மாத்திரையை ஒருமுறை அல்லது இரண்டு முறை என தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவுகளில் முன்னேற்றத்தைக் காணலாம்.
மருந்துகளை எடுப்பதற்கு முன்பு மருத்துவரின் பரிந்துரை பேரில் எடுத்துக் கொள்வது நல்லது.
வெந்தயத்தின் பக்க விளைவுகள்
- வெந்தய விதைகளை பச்சையாக எடுத்துக் கொள்வது உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்.
- வெந்தய விதைகளை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் போது வாயு வீக்கம் ஏற்படலாம்.
- இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் வெந்தய விதைகள் வினைபுரிய வாய்ப்பு உள்ளது.
- சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் வெந்தய விதைகளை எடுத்துவந்தால் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புண்டு.
- அதனால் மருத்துவரின் ஆலோசனையில் எடுத்துகொள்வதோடு அவ்வபோது சர்க்கரை அளவை பரிசோதிப்பதும் நல்லது.