Beetroot Soup: உடலுக்கு முழு ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் பீட்ரூட் சூப்
குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறி பீட்ரூட். நாம் வீட்டில் பல உணவை செய்து சாப்பிடுவது வழக்கம். அதவும் மாலைநேரங்கிளில் டீ காபி குடிப்பதை அனைவரும் ஒரு பழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இது உடலுக்கு நல்லதல்ல. இதை தவிர நாம் சூப்களை தயாரித்து குடித்தால் அது எமது உடலுக்கு இன்னும் நன்மை தரும். அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்க போவது பீட்ரூட் சூப்.
பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 அதிகமாக இருப்பதால் இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதை தவிர இது வேறு எவ்வாறெல்லாம் உடலுக்கு நன்மை தரும் என்பதையும் இது செய்யும் முறையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் – அரை கிலோ
- பெரிய வெங்காயம் – 2
- எலுமிச்சை பழம் – ஒன்று
- புதினா – சிறிதளவு
- க்ரீம் – ஒரு கப்
- மிளகுத்தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி அதை எண்ணெயில் தாளிக்க வேண்டும். இதன் பின்னர் பீட்ரூட்டை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த அரைத்த கலவையில் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் தாளித்த பொருட்களில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் மிளகுத்தூள் மற்றும் உப்பினை சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் இதை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கொதித்து முடிந்தவுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக கலக்கி சூப்பினை பருகவும். இதை வாரத்திற்கு மூன்று முறை பருகி வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
பீட்ரூட் சாப்பிடுவதன் நன்மைகள்
எமது சருமத்தில் தீக்காயங்கள் புண், போன்றவை ஏற்பட்டு இருந்தால் பீட்ரூட் சாறு தடவினால் அல்லது சாப்பிட்டால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
பீட்ரூட்டில் பீட்டாலைன் என்னும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் நாள்பட்ட அழற்சி போன்றவற்றைத் தீர்க்க உதவுகிறது.
நீரில் கரையும் நார்ச்சத்துக்கள் பீட்ரூட்டில் மிக அதிக அளவில் உள்ளதால் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். இதை தவிர பெருங்குடலைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்யும்.
கல்லீரல் கோளாறு இருப்பவர்கள் இந்த பீட்ரூட்டை சாப்பிடுவது சல்லது. பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த உணவு. இதை தவிர முகத்தின் பொலிவை அதிகரிப்பதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பீட்ரூட்டில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 58 கலோரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன.
மேலும் பீட்ரூட்டில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகிறது.
பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க முடியும். பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் காணப்படும் நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் சிறந்த தீர்வாக அமைகிறது.
அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் சூப்பில் தேன் கலந்து அருந்துவது அல்சரை விரைவில் குணமாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |