பத்தே நிமிடத்தில் சுடச்சுட பீட்ரூட் பஜ்ஜி....எப்படி செய்வது என்று பார்க்கலாம்!
பீட்ரூட்டில் பஜ்ஜி செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – 1 கப்
- பீட்ரூட் – 2 பெரியது
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவிற்கு எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிகொள்ளவும்.
பிறகு, பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும்.
பீட்ரூட் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது என்பதை மனதில் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த டேஸ்டியான பீட்ரூட் பஜ்ஜி தாயார்.
இந்த பஜ்ஜிக்கு தேங்காய், கார சட்னி அல்லது சாம்பார் சேர்த்து ருசிக்கலாம்.