காரில் இருந்த பெண்ணிற்கு கரடி கொடுத்த சர்ப்ரைஸ்! வைரல் காட்சி
சுற்றுலா தளம் ஒன்றில் காரில் இருந்த பயணிகளிடம் கரடி ஒன்று HiFi அடித்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப காலமாக இணையத்தில் பல சுவாசியமான காட்சி வலம் வருகின்றது. அதிலும் விலங்குகள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படும் காட்சியினை இங்கு காணலாம்.
இங்கு வன விலங்குகளில் ஒன்றாக காணப்படும் கரடிகள் கூட்டமாக சாலையில் அலைந்து கொண்டிருக்கின்றது. அங்கு காரில் இருந்த சுற்றுலா பயணிகள் கரடி ஒன்றிடம் விளையாடியுள்ளனர்.
காருக்குள் இருந்தவர்கள் கரடிக்கு HiFi கொடுத்த நிலையில், கரடியும் தனது கைகளை உயர்த்தி HiFi கொடுத்து அசத்தியுள்ளது.
பெரிய கரடி இவ்வாறு செய்ததை அருகில் நின்ற மற்ற கரடிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதை குறித்த காட்சியில் காணலாம்.
இது தொடர்பான வீடியோவை புபிட்டி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை பல மில்லியன் கணக்கானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வை பின்னால் இருந்த காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.