குழிக்குள் விழுந்த யானையை மீட்டது எப்படி? சிலிர்க்க வைக்கும் வைரல் காட்சி
மேற்கு வங்கத்தில் பள்ளத்தில் விழுந்த யானை ஒன்றை அறிவியல் விதியை பயன்படுத்தி உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்து வெளியே வரமுடியாமல் பிளிறிக்கொண்டுள்ளது. யானை பிளிறும் சத்தத்தைக் கேட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு அதிரடியாக செயல்பட்டு 3 மணி நேரத்தில் அறிவியல் முறைப்படி யானையை மீட்டுள்ளனர். யானை மீட்ட அறிவியல் என்ன என்பது நம்மில் பலருக்கும் குழப்பமாகவே இருக்கும்.
ஆர்க்கிமிடிஸ் விதி (மிதத்தல் விதிகள்):
மிதக்கும் ஒரு பொருளின் எடை, அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக இருக்கும்.
மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம், அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டும் ஒர் செங்குத்துக் கோட்டில் அமையும்.
மிதக்கும் பொருளின் அடர்த்தி, அது எந்தப் பாய்மத்தில் மிதக்கிறதோ அந்த பாய்மத்தின் அடர்த்தியினைவிட குறைவாக இருக்கும் - இதனை பயன்படுத்தியே பள்ளத்தில் விழுந்த யானையை மீட்டுள்ளனர்.
வெளியேற்றியது எப்படி?
முதலில் பள்ளத்திலுள்ள யானை எளிமையாக வெளியேறுவதற்கு ஏதுவாகச் சறுக்கலான ஒரு பாதை வளைவை ஏற்படுத்தி, பின்பு பள்ளத்தினுள் நீர் செலுத்த, செலுத்த யானை மேலே மிதக்கத் தொடங்கியுள்ளது.
அவ்வாறு மிதந்துக் கொண்டிருந்த யானை சறுக்கலாக அமைக்கப்பட்ட பாதை வளைவின் வழியாக ஏறி மேலே வந்துள்ளது. குறித்த யானை எந்தவொரு காயம் இல்லாமல் மீட்கப்பட்ட நிலையில் இதன் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Another day, another pachyderm get into trouble on 21/02/2022 at 1am in #Medinipur, no issue @WbdfSocial #Forest dept. Dedicated to serve... few lessons of #swimming and learning about #buoyancy, the #Elephant was #rescued and guided safely into #FOREST by 4am. Thanks to all.. pic.twitter.com/ahQi0NgQgP
— sandeepberwal@IFS (@sandeepberwal) February 21, 2022