இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான்... வெளியே கசிந்த ரகசியம்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷன் மூலம் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் எவிக்ஷன் புராசஸில் இடம் பெற்றனர்.
இந்நிலையில் கடந்த வாரமே ஆஜீத் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனிதா வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் ஆஜீத் வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் சக போட்டியாளரான ரம்யா ஆரி குறித்து அவதூறாக பேசி வந்தார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் இந்த வாரம் ரம்யாவை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஆஜித் வெளியேறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைய எபிசோடில் காட்டப்படும் என தெரிகிறது.
மேலும் நேற்றைய தினத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட பாலாஜி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.