கேப்டனை பார்க்க கிளிசரின் போட்டு கொண்டு வந்தாரா சூர்யா? புது சர்ச்சையை கிளப்பிய பயில்வான்
கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா கிளிசரின் போட்டு கொண்டு வந்ததாக விமர்சகர் பயில்வான் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சூர்யா
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் யாவும் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றன.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பலக் கோடி ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.
இப்படி உச்சத்தில் இருக்கும் சூர்யா விஜயகாந்த் சமாதிக்கு அங்கிருந்தவர்கள் முன்னிலையில் அழுது கொண்டு மலர் மாலை போட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
எல்லாமே நடிப்பு..
இதனை தொடர்ந்து விமர்சகர் பயில்வான் பிரபல சேனலுக்கு இது குறித்து பேட்டிக் கொடுத்துள்ளார்.
அதில், “ கேப்டன் இறந்து போய்விட்டார். இதற்கு ஒரு மனிதர் இரங்கல் செய்தி எப்படியும் சொல்லலாம். அமைதியாக நிதானமாக சொல்ல வேண்டியதை சூர்யா காரில் சென்றுக் கொண்டே தெரிவித்தார்.
சூர்யா இப்படி செய்தது நடிப்பு. அத்துடன் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகிய மூவர் வந்து அஞ்சலி செலுத்தி இருக்கலாம். இவர்கள் இப்படி செய்யாமல் இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது.
அதாவது சூர்யா- ஜோதிகா திருமணத்தின் போது திருமண பத்திரிகை கொடுப்பதற்காக விஜயகாந்திற்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார் சிவகுமார். இதைக் கேட்ட விஜயகாந்த் “ தயவுசெய்து வர வேண்டாம் நான் கல்யாணத்திற்கு வரவில்லை” எனக் கூறியுள்ளார்.
திருமணத்தில் ஏற்பட்ட விரிசல்
இவர் திருமணத்திற்கு வரவில்லை எனக் கூறியதற்கு முக்கிய காரணம் அங்கு ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்டவர்கள் வருவார்கள் என்று சிவகுமார் சொல்லி இருக்கிறார். இதனால் விஜயகாந்திற்கு சிவகுமார் மீது கோபம் வந்துள்ளது.
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சூர்யா வீட்டிற்கே சென்று பரிசு பொருளை வழங்கி வந்துள்ளார். இதனை மனதில் வைத்து கொண்டு நினைவிடத்திற்கு செல்லவில்லை என்றால் மகன்களுக்கு கெட்ட பெயர் வரும் என பயத்தில் வருகை தந்துள்ளனர்.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த சூர்யா வீட்டிலிருந்து வரும் போதே கிளிசரின் போட்டு கொண்டே வந்துள்ளாரா? ஏனெனின் நடிகர்கள் எப்படி அழுவார்கள் என எங்களுக்கு தெரியும்.
மேலும் கிளிசரின் போடாமல் சிவகுமார் எப்படி அழுவார் என்றும் தெரியும். இப்படி அழுதால் கேப்டன் வந்து விடுவாரா?” என சூர்யாவை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
இந்த செய்தி சூர்யா நடிகர்கள் மத்தியில் பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் “மூத்த நடிகர் ஒருவரை இப்படி அவமானமாக பேசுவது கண்டனத்திற்குரியது? ” என ரசிகர்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |