பொலிஸுடன் வந்த கணேஷ்... ஆடிப்போன குடும்பத்தில் நடந்த டுவிஸ்ட்
பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவை அழைத்துச் செல்ல கணேஷ் பொலிசாருடன் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார். தற்போது கணேஷ், அமிர்தா மற்றும் பிள்ளையை அழைத்துச் செல்வதற்கு தகராறு செய்து வருகின்றார்.
இதற்கிடையே ஜெனி மற்றும் செழியன் பிரச்சினை நீதிமன்றம் வரை வந்துள்ளது. இந்நிலையில் கணேஷ் அமிர்தாவையும், நிலாவையும் அழைத்துச் செல்வதற்கு பொலிஸ் உடன் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஆடிப்போன நிலையில், கடைசியில் பாக்கியா தனது காபியினால் பொலிசாரையே கவிழ்த்துள்ளார். பொலிஸ் அமிர்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அமிர்தா அளிக்கும் பதில் தான் அடுத்து என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |