கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக்கொண்ட பாரதி: கண்ணம்மாவால் தகப்பன் கொல்லப்பட்டது தெரிந்தால்...!
இன்றைய பாரதிகண்ணம்மா தொடரில் கண்ணம்மாவை காதல் மனைவியாக நினைத்து கனவு கண்டு அதை நிஜமாக்க திட்டம் போடும் பாரதி.
பாரதி கண்ணம்மா 2
பாரதி கண்ணம்மா தொடரின் முதலாம் பாகம் கடந்த வாரம் முடிவடைந்துள்ளது. எப்படா முடிப்பார்கள் என்று காத்திருந்த மக்களுக்கு தற்போது கதையை முடித்து விட்டு திரும்புவதற்குள் பாகம் இரண்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டார்.
இந்த தொடரிலும் அதே பாரதி கண்ணம்மாவா என எதிர்ப்பார்த்தவர்களுக்கு பாதி மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். இதில் பாரதியாக சன் டிவி ரோஜா சீரியல் புகழ் சிப்புதான் இந்த தொடரில் நடிக்கிறார். இதில் கண்ணம்மாவாக அதே வினுஷா தான் நடிக்கிறார்.
இன்றைய எபிசோட்
இந்நிலையில் இன்று, கண்ணம்மா மீது இருக்கும் காதல் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில், பாரதி கனவில் கூட பாரதி - கண்ணம்மா திருமணம் நடைபெறுவது, தாலிக்கட்டியப்பின்னர் இருவரும் நடனம் ஆடுவது போலவும் அதில் சர்ச்சை நாயகி வெண்பாவும் இணைந்து ஆடுவதுபோலவும் கனவு கண்டு திடீரென எழுத்திருக்கிறார்.
இந்தக் கனவையும் காதலையும் உறுதிப்படுத்துவற்காக பாரதி ஒரு திட்டம் போடுகிறார். அதில் முன்னதாக பாரதி தண்ணீரில் வீசிய மாலை கண்ணம்மாவி்ற்கு சென்றது போல மீண்டும் ஒரு மாலையை பூசாரியிடம் கொடுக்க அது மீண்டும் கண்ணம்மாவிடம் சேர்ந்தால் காதல் உறுதியாகி விடும் எனவும் திட்டத்தை போட்டிருக்கிறார்.
அவரின் திட்டம் போலவே மாலையும் கண்ணம்மா கழுத்தில் சேர்ந்து விட்டது. அப்படியென்றால் பாரதியின் கனவும், காதலும் கைகூடும் என்று சந்தோசத்தில் குதிக்கிறார் பாரதி.
ஆனால் பாரதியின் தந்தையைக் கொன்றது கண்ணம்மா என்று தெரிந்தால் என்ன நடக்கும் என்பதே அனைவரின் ஆவலுக்கு தீனி போடு வகையில் இருக்கிறது.