பிரபல நாட்டில் கஞ்சா பீட்சா விற்பனை விரைவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
தாய்லாந்து நாட்டில் கஞ்சா பீட்சா விற்பனை செய்யப்பட்டும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கஞ்சா செடியை வளர்க்க அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் போதைப்பொருள் என தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையும் பயன்படுத்துதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், தற்போது தாய்லாந்து நாட்டின் துரித உணவுகளில் ஒன்றான கிரேஸி ஹேப்பி பிட்சா நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த நிறுவனத்தின் பிட்சாவில், கஞ்சா சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதற்கான இது ஒரு சந்தைப்படுத்தல் பிரசாரம் தான் இது. நீங்கள் பீட்சாவுடன் கஞ்சாவை சுவைக்கலாம், அதனால் உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம்.
மேலும், சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக மட்டுமே நாங்கள் இருக்க விரும்புகிறோம் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது.
ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும்.