வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் இருக்கின்றதென்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் வேகவைத்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
வாழைப்பழத்தின் நன்மைகள்
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொற்றாசியம் உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.
அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். வயிற்றுப்புண் மற்றும் மூல வியாதி உள்ளவர்களும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அதனில் இருக்கும் பாதிப்பு குறையும்.
வேக வைத்த வாழைப்பழத்தின் நன்மைகள்
பொதுவாக நாங்கள் வேகவைத்த வாழைப்பழங்களை விரும்புவது குறைவு. ஆனால் வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிடுவதில் எத்தனை நன்மைகள் இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
வாழைப்பழத்தை வேகவைப்பதன் மூலம் அதன் சத்துக்கள் நமக்கு அப்படியே கிடைக்கும். கொதிக்கும் சூடான நீர் வாழைப்பழத்தின் செல் சுவர்களை உடைக்க உதவுகிறது மற்றும் அதன் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை உடலுக்கு அணுகக்கூடியதாக ஆக்குகிறது.
வாழைப்பழத்தில் உள்ள மாவுச்சத்தின் அளவையும் கொதிக்க வைப்பதால் அதிகரிக்கிறது, இது நீடித்த ஆற்றலை உங்களுக்கு வழங்கும்.
வேகவைத்த வாழைப்பழம் சாப்பிடுவதால் மனநல நன்மைகள் அதிகம் இருக்கின்றது.
சூடு ஆறுதலான உணவாகவும், பதட்டத்தைத் தணிக்கவும், ஓய்வெடுக்கவும் உதவும். வாழைப்பழத்தை இப்படி சாப்பிடுவது உங்களை நன்றாக உணர வைக்க உதவுகிறது.