17 வயது சிறுவனிடம் புழுவாய் துடித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்: கிடைத்த அதிரடியான தண்டனை
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்புணர்வு கொடுத்த சிறுவனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள புதுநல்லூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி வசித்து வருகிறார்.
இந்த பெண்மணிக்கு அப்பகுதியை சார்ந்த 17 வயது நிரம்பிய தனபால் என்ற சிறுவன் வன்கொடுமை செய்துள்ளான். மேலும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.
இந்த விஷயம் குறித்து அறிந்த பெண்ணின் தயார் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், குறித்த சிறுவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தனபால் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாகவே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் வெளியாகியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.