என்னுடைய கனவு இதுதான்... இந்திய அணிக்கு மீண்டும் வந்த ஷிகர் தவானின் உருக்கம்!
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டியை விளையாடி வருகிறது. நேற்று நடைப்பெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றியை பதிவு செய்திருந்தது.
பும்ரா 6 விக்கெட் எடுத்து புதிய சாதனை படைக்க, கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்களை அடித்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த சாதனையும் படைத்திருந்தார்.
அவருக்கு துணையாக ஷிகர் தவான் 31 ரன்களை எடுத்திருந்தார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க தவித்த ஷிகர் தவான் அணியில் இடம்பிடித்தது ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய தவான் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னர் வரை 149 போட்டிகளில் விளையாடி 6284 ரன்கள் குவித்துள்ளார்.

எனது லட்சியம்
இந்நிலையில், ஷிகர் தவான் அளித்திருந்த பேட்டி ஒன்றில், “எனக்கு இந்திய அணியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த நினைக்கிறேன். என்னுடைய எண்ணம் எல்லாம் தற்போது ஒரு விடயத்தில் மட்டுமே உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 உலகக் கோப்பையில் நான் விளையாட வேண்டும். அது மட்டுமே என்னுடைய இலக்கு. அதற்காக ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி என்னை மெருகேற்றி வருகிறேன்.
துவக்க வீரராக நான் விளையாடுகையில் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை ஏற்படுகிறது. முதலில் 20, 30 ரன்களை குவித்து விட்டால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் அந்த வகையில் நான் கடினமாக உழைத்து வருகிறேன்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன்
மேலும், எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்தி வருவதாகவே நினைக்கிறேன். கிரிக்கெட்டிற்காக என்னுடைய உடற்பகுதியையும் தற்போது வரை நான் பிட்டாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதனால் அவர் இந்திய அணிக்கு ஓபனர் பேட்ஸ்மேனாக களமிறங்குவது பக்கபலமாக இருக்கும் என ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.