INDvs END; பும்ராவின் வேகத்தில் 110 ரன்களில் வீழ்ந்த இங்கிலாந்து அணி - இந்திய அணி புதிய சாதனை
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டனில் நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை.
இதனிடையில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பித்த முதலே தடுமாறி வந்தது. இதனால், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
ஜேசன் ராய் ரன் ஏதும் எடுக்காமலும் ஜானி பேர்ஸ்டோவ் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, களமிறங்கிய ஜோ ரூட்(0) பும்ராவின் புயலில் டக் அவுட் ஆகினார்.

அடுத்ததாக முகமது ஷமியிடம் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.லியாம் லிவிங்ஸ்டோன் 8 பந்துகளை சந்தித்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்ட் ஆகினார்.
பின்னர் வந்த வீரர்களும் தடுமாற, டேவிட் வில்லி 20 ரன்களில் பும்ராவின் வேகத்தில் போல்டு ஆனார். இறுதியில் 25.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டும்,ஷமி 3 விக்கெட்,பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர்.தொடர்ந்து 111 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணிக்கு எதிராக குறைந்த இலக்கு அடித்தது இது இங்கிலாந்து அணிக்கு முதல் முறை. இதற்கு முன் 125 ரன்கள் அடித்திருந்ததே இங்கிலாந்து அணியின் குறைந்த ரன்களாக இருந்தது.