உங்க குழந்தை ஒல்லியாகவே இருக்காங்களா? அப்போ தினமும் இத கொடுங்க! பலன் நிச்சயம்
பொதுவாக சில வீடுகளில் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுத்தாலும் அவர்கள் ஒல்லியாக தான் இருப்பார்கள்.
இதனால் நிறைய தாய்மார்கள் குழந்தைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி வைட்டமின் மருந்துகள் வாங்கி கொடுப்பார்கள்.
இந்த பிரச்சினைக்கு மருத்துவரிடம் செல்லும் முன்னர் நம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு நாம் குழந்தைகளின் எடையை அதிகரிக்கலாம்.
அந்த வகையில் ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை புருஷ்டியாக மாற்றும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளின் எடையை அதிகரிக்கும் உணவுகள்
1. உருளைக்கிழங்கு
குழந்தைகள் மற்ற காய்கறிகளை விட உருளைக்கிழங்கை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இது குழந்தையின் உடம்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் உருளைகிழங்கில் கலோரி, அமினோ அமிலம், பைபர் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் குழந்தைகளின் எடை காலப்போக்கில் அதிகரிக்கும்.
2.முட்டை
முட்டை சாப்பிட்டால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு எடை அதிகரிக்கும். ஏனெனில் முட்டையில் அதிகப்படியான புரோட்டின், விட்டமின், மைக்ரோ யுனிட்ஸ் ஆகியவை இருக்கின்றன. இது எடை அதிகரித்து ஒல்லியாக இருப்பவர்களை புஷ்டியாக மாற்றுகின்றது.
இதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கும் போது பொரித்ததை விட அவித்த முட்டை கொடுத்தால் ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.
3. பால் உணவுகள்
பொதுவாக பால், நெய் , வெண்ணெய் ஆகியவை எடை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுப்பதால் எடை அதிகரிப்புடன் சேர்த்து எலும்புகளையும் வலிமையாக்குகின்றது.
மேலும் வெண்ணெயில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு சத்து வேகமாக எடையை அதிகரிக்க செய்கின்றது.
4. மாமிச உணவுகள்
குழந்தைகள் ஒல்லியாக இருந்தால் மாமிச உணவுகள் கொடுக்கலாமா? வேண்டாமா? என தாய்மார்கள் குழப்பத்தில் இருப்பார்கள். ஏனெனின் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சினை வந்து விடும் என பயந்து கொண்டிருப்பார்கள்.
நன்றாக வேக வைத்த உணவுகளை கொடுப்பதால் குழந்தைகளின் எடை வேகமாக அதிகரித்து காலப்போக்கில் குழந்தைகளை கொழு கொழுவென மாற்றி விடும்.
5. நட்ஸ்
எடை அதிகரிப்பு என நினைக்கும் போதே நமக்கு ஞாபகம் வருவது உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் தான். நட்ஸ்களில் புரத சத்துக்கள், மைக்ரோ யுனிட்ஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
இதனை குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். மேலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது கூட ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம்.