3 வருடங்களாக பச்சை மாமிசத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழும் அமெரிக்க நபர்! வியக்க வைத்த தகவல்
பச்சை மாமிசத்தை மட்டுமே கடந்த மூன்று வருடங்களாக சாப்பிட்டு இளைஞர் ஒருவர் வாயடைக்க வைத்துள்ளார்.
அமெரிக்காவின் நெப்ராஸ்காவைச் சேர்ந்தவர் 39 வயதான வெஸ்டன் ரோவ். இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, பச்சை மாமிசம், அதாவது சமைக்கப்படாத இறைச்சியை மட்டுமே உண்டு வருவதாக சமீபத்தில் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், பச்சை மாமிசம் உண்டு வந்ததால் ஆற்றல் மேம்பட்டதாகவும், இதுவரை இந்த உணவுப்பழக்கத்தால் எந்த விதமான பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, பச்சை மாமிசம் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் ஒரு மனிதன் என்று அறிக்கை வெளியானது. இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த நேரத்தில் நான் 99 சதவிகித ஆர்கானிக், புதிய, சமைக்காத பச்சையான இறைச்சியை சாப்பிடுகிறேன் ஒரே ஒரு முறை கூட எனக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதில்லை.
மேலும், நான் இனி பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடப் போவதில்லை. அதனால், நான் சமைத்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருப்பது என்றும் கூற மாட்டேன்.
நான் சாப்பிடும் அனைத்து இறைச்சிகளும், பால் பொருட்களும் கால்நடைகளை வளர்க்கும் உள்ளூர் சப்ளையர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து மட்டுமே பெறுகிறேன். என் தோட்டத்தில் நானே மரம் செடிகளை நட்டு எனக்கான பழங்களை வளர்க்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
மேலும், நான் 20 வயதில் என்னுடைய ஊட்டச்சத்து மற்றும் ஃபிட்னஸ் பற்றி அக்கறைக் கொள்ள ஆரம்பித்தேன். எனக்கு அரிப்பு, தோலழற்சி, மங்கும் சிந்தனை மற்றும் தீவிரமான உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான அறிகுறிகளை அனுபவிக்க ஆரம்பித்தபோது என் உணவில் மாற்றம் தேவை
என்பதை உணர்ந்தேன். 35 வயதாக இருந்தபோதுதான் நான் மாமிச உணவை சாப்பிட முயற்சித்தேன். நான் தொடங்கிய நேரத்தில், இது மிகப்பெரிய டிரெண்டாக இருந்தது.
மதிய உணவு தான் பிரதான உணவு என்றும், அரைபவுண்டு அளவுக்கு பச்சையான, உப்பில்லாத வெண்ணெய் மற்றும் மூன்று அல்லது நான்கு முட்டைகள் சேர்த்து பச்சையான இறைச்சியை சாப்பிடுவேன் என்று தெரிவித்தார்.
காலை உணவில் பழம் சாப்பிடுவார் என்பதும், இரவு உணவுக்கு மாமிசத்துடன் சமைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சாப்பிடுவதாகவும் கூறினார்.