காபியில் சிறிது வெண்ணெய் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பலருக்கும் பொழுதே விடிவது காபியில் தான், சூடான ஒரு கப் காபியை குடித்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் உணர்வார்கள்.
தலைவலி, சோர்வு என்றவுடன் காபி குடித்தால் சரியாகிவிடும் என்பதே பலரது நிலை, சாதாரண காபியை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் காபி வெண்ணெய் போட்டு குடிப்பது பற்றி தெரியுமா? அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
சிலருக்கு காபி குடித்தால் செரிமான தொந்தரவுகள் ஏற்படலாம், அதுவே வெண்ணெய் அல்லது நெய் கலந்து குடிக்கும் போது செரிமான பிரச்சனைகள் தவிர்க்கப்படும், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இந்த பானம் உதவும்.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன் மனநிலையை சீர்படுத்துகிறது.
எப்படி தயாரிப்பது?
தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் காபி தூளை சேர்க்க வேண்டும்.
அதன்பிறகு வெண்ணெய் மற்றும் போதுமான அளவு உப்பு போட்டு மிக்ஸியில் நன்றாக அடித்து விட்டு காபியில் கலக்கினால் சுவையான வெண்ணெய் காபி தயார்!!!