கோதுமை மா மேக்கப்.. த்ரில்லர் பட பேய் போல் என்றி கொடுத்த சுட்டி குழந்தை! மிரண்டு போன நெட்டிசன்கள்
வீட்டிலுள்ள கோதுமை மாவை எடுத்து பக்கவாக குட்டி சாத்தான் போல் மேக்கப் போட்டி சுட்டி குழந்தைகளின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சுட்டி குழந்தைகளின் சேட்டைகள்
பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தைகள் வீட்டில் மா, பருப்பு, கடலை இது போன்ற பொருட்கள் கையில் கிடைத்தால் அதனை கொட்டி விளையாடி விடுவார்கள்.
தற்போது இந்த பிரச்சினை சில வீடுகளில் மட்டும் தான் நடந்து கொண்டு வருகிறது.
மேலும் அம்மாக்கள் குழந்தைகளிடமிருந்து இது போன்ற பொருட்களை மறைத்து வைப்பது பெரிய சவாலாக இருக்கும்.
அந்த வகையில் மூன்று குழந்தைகள் வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த மாவை எடுத்து வீட்டில் கொட்டி தங்களின் உடம்பிலும் பூசிக் கொண்டுள்ளார்கள்.
மேக்கப்பில் டப் கொடுத்த சிறுவர்கள்
அதிலும் சுமார் 2 வயது குழந்தையொன்று அந்த மாவை குட்டி சாத்தான் போல் உடம்பிலும் முகத்திலும் பூசிக் கொண்டு கண்ணு மட்டும் தெரியவது போல் வெளியில் வருகிறது.
இந்த காட்சியை பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் குழந்தையின் முகத்தில் இருக்கும் மா குழந்தையின் மூக்கின் மூலம் நுரையீரலை பாதிக்க வாய்ப்பாக இருக்கிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்து சிலர் புன்னகைத்தாலும், “குழந்தைகள் இவ்வாறு செய்யும் வரை பெற்றோர்கள் எங்கு சென்றார்கள்.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.