கதறியழுத பிரபல நடிகை! கையில் இருந்த குழந்தை கொடுத்த ரியாக்ஷனைப் பாருங்க
பிரபல சீரியலான பாக்கியலட்சுமியில் அமிர்தாவாக நடித்து நடிகை சீரியலுக்காக அழுதுள்ள நிலையில், அவர் கையில் இருந்த குழந்தை அவரது கண்ணீரை துடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியலாகும். இந்த சீரியலில் கதாநாயகி சுசித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.
முக்கியமாக இல்லத்தரசிகளின் மனதைக் கொள்ளை கொண்டவர் இவர்தான். ஏனெனில் சாதாரண குடும்ப பெண்களின் நிலையினை தத்ரூபமாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகன் எழிலின் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு அவர் காதலித்த அமிர்தா தனது குழந்தையுடன் மண்டபத்திற்கு வந்துள்ளார்.
இதனை அறிந்த ஈஸ்வரி அவரை வெளியே கூட்டிவந்து சத்தம் போட்டு விரட்டிவிடுகின்றார். அப்பொழுது அமிர்தா கையில் குழந்தையை வைத்து அழுதுள்ளார்.
அப்பொழுது குறித்த குழந்தை நட்சத்திரம் உண்மையாகவே அழுகின்றார் என்று நினைத்து அவரது கண்ணீரை துடைத்து விட்டதுடன், அவருக்கு முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தியுள்ளது.