மூச்சு விட சிரமமா? நுரையீரலை சுத்தமாக வைத்திருக்க செய்ய வேண்டியவை
உடல் உறுப்புகளை சீராக வைத்திருப்பது அவசியமான ஒன்று. அதிலும் நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் உடல் முழுதும் ஆக்சிஜன் கடத்தப்படுவதில் சிக்கல் ஏற்படும். எனவே எப்போதும் நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம்.
புகைப்பிடிப்பது
முதலில் நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்க புகைபிடித்தல் கூடாது என்ற வாக்கியத்தை காலம்காலமாக கேட்டு வந்தாலும் நாளுக்கு நாள் புகைபிடிக்கும் பழக்கமானது இளைஞர்களிடையே அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.
எனவே,புகையானது காற்றுப்பைகளை ஒடுக்கி மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கிறது. மேலும் புகைப்பிடித்தல் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வது நுரையீரல் ஆக்சிஜனை நன்றாக உள்ளிழுத்து உடல் திசுக்களுக்கு கடத்த உதவும்.
அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
மூச்சுப்பயிற்சிகள்
மூச்சுப்பயிற்சிகளை பழக்கப்படுத்தும்போது, ஆழ்ந்து மூச்சுவிடுவது அவசியம். இது நுரையீரல் திறனை மேம்படுத்தவும், நுரையீரலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மாசுபட்ட காற்று
நுரையீரலை பலவீனமடையச் செய்யும் மற்றொன்று மாசுபட்ட காற்று. இது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாஸ்க் அணிவது சிறந்தது. மேலும் காற்று சுத்திகரிப்பான்களையும் பயன்படுத்தலாம்.