2026இல் நடக்கப்போகும் மர்மங்கள் என்ன? பாபா வங்காவின் 5 கணிப்புகள்
உலகத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறி புகழ் பெற்றவர் பாபா வங்கா. தற்போது 2026 ஆம் ஆண்டு பற்றிய பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பாபா வங்கா கணிப்புகள்
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வாங்கா 2026 ஆண்டில் நடக்கவிருப்பவை பற்றி கணித்துள்ளார். இது தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்னும் AI தொழில்நுட்பம் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது உலகளவில் AI இல்லாத துறையே இல்லை .
அதன்படி பாபா வங்கா கணித்துள்ளது 2026ல் AI மூலமாக மனித உறவுகளுக்கு பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மனிதர்களின் வாழ்க்கையையும் கூட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் அளவுக்கு AI வளர்ச்சி அடையும் என கணிக்கப்ட்டுள்ளது.
மக்கள் அதிகமாக வாங்கும் தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் உயரும் என கணித்துள்ளார்.

பாபா வங்கா கடந்தாண்டு பல உலக நாடுகளுக்குள் இனக்கலவரங்கள், போர் நடக்கும் என்று கணித்திருந்தார். அதன்படியே உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர், இந்தியா-பாகிஸ்தான் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம் என பல உலக நாடுகளில் போர் நடைபெற்றது.
இதை போலவே 2026-ம் ஆண்டிலும் ஒரு பெரும் உலகப்போர் தொடங்கும் என கணித்துள்ளார். அவர் கணித்ததன் படி ,அந்த போரில் முக்கிய வல்லரசு நாடுகள் ஈடுபடும் என்றும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் பதற்றம் பரவும் எனவும் கணித்துள்ளார்.
இப்படி நடந்தால் பொருளாதார பிரச்சனை, கரன்சி மதிப்பு சரிவு, வங்கிகள் திவால், பணவீக்கம் அதிகரிப்பு, நிதிநெருக்கடி போன்ற பிரச்சனைகள் தலைதூக்கும்.

வரும் புத்தாண்டான 2026-ம் ஆண்டில் இயற்கை பேரழிவுகள், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் என்றும் அந்த பேரழிவால் 7 - 8 சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்த மோசமான காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத வெள்ளம், தீவிர வறட்சி வானிலை ஏற்படும் என்றும் இதனால் பூமியின் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
2026-ம் ஆண்டு நவம்பரில் ஒரு பெரிய விண்வெளிக்கப்பல் பூமியை நோக்கி வரும் இதன் மூலம் மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்வார்கள், மனிததுகளுடன் வேற்றுகிரகவாசிகள் பேசுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |