பாக்கியா மீது காதல் வயப்பட்ட கோபி! கோபத்தில் ராதிகா
பாக்கியலட்சுமி சீரியல் அனைவரதும் விருப்பத்துக்குரிய சீரியலாக தற்போது வரையில் காணப்படுகின்றது.
அந்த வகையில் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். நேற்று எபிசோடில் செழியன் கோபியை அடிக்க முற்பட்டதை நினைத்து கோபி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
image - india posts english
அந்நேரத்தில் அங்கு வந்த ராதிகா கோபியிடம், உங்கக்கிட்ட ஒன்னு கேட்கணும்...“உங்களுக்கு பாக்கியா மேல இன்னும் லவ் இருக்கு போல, அதுனாலதான் அவங்க யார்கிட்ட பேசினாலும் உங்களுக்கு கோபம் வருது.
நீங்க தான் பாக்கியா ரசிகர் மன்ற தலைவர் போலன்னு கேட்க, அதற்கு கோபி, “ச்சீ வாயக் கழுவு. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. அவ பண்ற தப்பு யாருக்குமே தெரியல அதான் என் பிரச்சினை” அப்படின்னு சொல்றாரு.
கோபி பேசியதைக் கேட்ட பாக்யா மிகுந்த வருத்தத்தில் இருக்கும்பொழுது, ஈஸ்வரி அவங்களுக்கு ஆறுதல் சொல்றாங்க.
இந்நிலையில ஜெனி, செழியன் பண்ண காரியத்துக்காக அவர பாராட்டுறாங்க.
அப்போ செழியனோட ஆபிஸ்ல வேலை பார்க்குற பொண்ணு அவருக்கு கோல் பண்றாங்க...என்ன பண்றதுனு தெரியாம செழியன் முழிக்கிறாரு.