இனியாவை ஏமாற்றிய கோபி... தந்தையின் சுயரூபத்தை அறிந்த இனியாவிற்கு கடவுளாகும் பாக்கியா
இனியாவை ட்ரிப்பிற்கு அழைத்துச் செல்வதாக கூறிய கோபி தற்போது கழற்றிவிடும் சூழ்நிலையில் காணப்படுவதால், இனியாவிற்கு பாக்கழியா ஹீரோவாக மாறும் காட்சியை இனிவரும் நாட்களில் அவதானிக்கலாம்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்த கோபி பாக்கியாவின் சாவாலில் தோல்வியடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்
இனியா சேர்ந்த கல்லூரியில் பாக்கியாவும் கல்லூரியில் சேர்ந்துள்ளதுடன், தனது மாமியாரிடமும் சம்மதம் பெற்றுள்ளார். கல்லூரியில் இனியாவிற்கு ஃபீல்டு ட்ரிப் அழைத்து செல்ல கோபி சம்மதம் கூறியுள்ளார்.
இத்தருணத்தில் மயூ வயதிற்கு வந்ததால், இனியாவை அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளார் கோபி. ஆனால் இனியா ட்ரிப் போவதை எண்ணி கொள்ளை மகிழ்ச்சியில் காணப்படுகின்றார்.
இவ்வாறு கோபி ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத இனியாவிற்கு பாக்கியா தான் கடவுளாக வந்து குறித்த ஃபீல்டு ட்ரிப்பிற்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எப்பொழுதும் தந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனியா இம்முறை பாக்கியா பக்கம் நிற்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |