வீட்டு கடனுக்காக புதிய முயற்சியில் காலடி எடுத்து வைக்கும் பாக்கியா..! பழனிச்சாமி உதவுவாரா?
கோபியின் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்பதற்காக புதிய கேட்ரிங் ஆடரை பாக்கியா ஏற்றுக் கொள்கிறார்.
பாக்கியலட்சுமியில் புதிய திருப்பம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல் அல்லாது சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஒவ்வொரு எபிசோட்களுக்கு ஏதாவது ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். மேலும் கோபி இரண்டாவது மனைவி ராதிகாவின் பேச்சை கேட்டு கொண்டு பாக்கியாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வருகிறார்.
இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் பாக்கியா அவருடைய வேலையில் மிக கவனமாக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவிற்கு பழனிச்சாமிக்கும் திருமணம் என நினைத்து கொண்டு கோபி சிறிது காலம் மிகுந்த மனஉளைச்சலில் அள்ளி கொண்டிருந்தார்.
ஆனால் இது உண்மையல்ல என தெரிய வந்த போது அவருக்கான சந்தோசம் தாங்க முடியவில்லை.
பாக்கியாவின் புதிய முயற்சி
இந்த நிலையில், ராதிகா கோபியின் அம்மாவை மரியாமை இல்லாமல் பேசியுள்ளார். இதனை பார்த்து கொண்டிருந்த அனைவரும் பொறுமையாக இருக்கும் போது பாக்கியாவிற்கு கோபம் வந்து விட்டது.
அதனால் ராதிகாவை தன்னுடைய மாமியாரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். “ என்னால் யாரீடமும் மன்னிப்பு கேட்க முடியாது..” என ராதிகாவும் மறுத்துள்ளார்.
கோபியிடம் இல்லாபொல்லாத பொய்யெல்லாம் கூறி ராதிகா ஏற்றி விட்டுள்ளார். இதனால் கடுப்பான பாக்கியா இன்னும் 1 மாதத்தில் கோபிக்கான பணத்தை செட்டில் செய்வதாக சவால் விட்டுள்ளார்.
பாக்கியாவின் சவாலை பழனிச்சாமியிடம் கூறி பணம் வாங்க போவதாக ரசிகர்கள் நினைத்தாலும் அவ்வாறு நடக்கவில்லை.
புதிய கேட்ரிங் ஓடரை வாங்கி அதன் மூலம் பணம் சம்பாரிக்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவு பாக்கியாவின் பெறுந் தன்மையை காட்டுகின்றது.
அத்துடன் குடும்ப பெண்ணுக்கு என்ன தேவையோ அதனை பாக்கியலட்சுமியின் இயக்குநர் காட்டி வருகிறார். பாக்கியாவின் இந்த முயற்சி வெற்றி பெறுமா? என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.