இனியாவிற்கு போட்டியாக காலெஜ் செல்ல ஆசைப்படும் பாக்யா... அதிர்ச்சியில் கோபி!
பாக்கியலட்சுமி சீரியலில் மாஸாக கெத்து காட்டி வரும் பாக்யா தற்போது தனது மகளுடன் காலெஜ் படிக்க புது முயற்சியில் இறங்கும் காட்சி ப்ரோமாவாக வெளியாகியிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவர் சந்திக்கும் சவால்களையும் அவர் கணவரை எதிர்த்து வெற்றி பெற்று கெத்து காட்டும் கதையாக காட்டி வருகிறார்கள்.
காலெஜ் படிக்கும் ஆசையில் பாக்யா
இந்நிலையில், இன்றைய தினத்திற்கான ப்ரோமோ காட்சியில், சுய தொழில் செய்யும் பெண்களுக்கு லோன் வழங்கப்படும் என்ற தகவலை அறிந்துக் கொண்டு சமந்தப்பட்டவரை தேடிப் போய் விசாரித்த பாக்யாவிற்கு டிகிரி சேர்ட்டிபிகேட் இல்லாததால் லோன் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.
இதனால் நள்ளிரவில் எழும்பி தூங்கிக் கொண்டிருந்த இனியாவை எழுப்பி காலேஜ் செல்லப் போவதாக கேட்டு வருகிறார்.