பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வேறு சேனலுக்கு செல்லும் முக்கிய நடிகை
பாக்கியலட்சுமி சீரியல் பாக்யாவின் மருமகளாக நடிக்கும் ஜெனி தற்போது வேறு சேனலில் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி ஜெனி
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த சீரியலில் ஜெனியாக நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் சீரியலில் மூத்த மகன் செழியனின் மனைவியாக நடித்து வருகிறார். இவரின் இயல்பான நடிப்பு எல்லோருக்கும் பிடித்துப்போக இவருக்கென ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள்.
வேறு சீரியலில் கதாநாயகி
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெனி வேறொரு சேனலில் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய சீரியல் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அந்த சீரியலில் ஜெனி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் அதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய சீரியலில் குழந்தைக்கு அம்மா ரோலில் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளர். இது பற்றிய உறுதியா அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |