என்னாது மூணாவது கல்யாணமா? கையில் மாலையுடன் போஸ் கொடுத்த கோபி
கையில் மாலையுடன் இருக்கும் கோபியின் புகைப்படம் ஒன்று தற்போது பல கேள்விகளுடன் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி கோபி
பிரபல தொலைக்காட்சியொன்றில் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஆரம்பம் முதல் இன்று வரை அடுத்தடுத்து சுவாரஸ்யமாக நகர்த்துக்கொண்டு இருக்கிறது.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இரவு 8.30 மணி ஆகிவிட்டாளே ரிவிக்கு முன் அமர்ந்துக் கொண்டு காத்திருக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குறித்த சீரியலில் தற்போது கோபியிடம் விட்ட சவாலுக்காக பாடுபடும் காட்சிகளும் ராதிகா கோபியின் இருவீட்டுத் திண்டாட்டம் தான் காட்சிகளாக வெளியாகி வருகின்றது.
தற்போது ராதிகா அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரது வீட்டில் இருந்து பாக்யா வீட்டுக்கு மூட்டை முடிச்செல்லாம் கட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.
இனிமேல் தான் தற்போது சூடுபிடிக்கப் போகிறதென்று மக்கள் இந்தத் தொடர் மீது இன்னும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மூன்றாவது கல்யாணத்திற்கு தயாரா?
இந்நிலையில் கோபியின் புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது. அந்தப் புகைப்படத்தில் கோபி கையில் ஒரு மாலையுடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன கோபி இரண்டவாது மேரேஜ்ஜும் டிவோர்ஸா அதான் மூணாவது கல்யாணத்திற்கு தயாராகி விட்டீர்களா எனக் கேட்டு வருகின்றனர்.